இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் (27-09-2023) ஜேர்மனிக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் ஜேர்மனியில் இருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஐந்து பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பதில் நிதி அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.