பார்த்திபன் திலீபனாக திலீபன் தியாக தீபமாக என்னும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறப்பு 

பார்த்திபன் திலீபனாக திலீபன் தியாக தீபமாக என்னும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறப்பு

தன் உயிரிலும் மேலாக தான் நேசித்த மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் முப்பெரும் தியாகங்களைப் புரிந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் வரலாற்றினை எமது அடுத்த சந்ததியிருக்குக் கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் பார்த்திபன் திலீபனாக ! திலீபன் தியாக தீபமாக !! என்னும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்று (22.09.2023) மாலை 6 மணிக்கு நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் MP, வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ. வீ. சிவஞானம், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச. சுகிர்தன், யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ. பார்த்திபன், ஓய்வு பெற்ற அதிபர் க. அருந்தவபாலன், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN