பெண்களுக்கு இரவு நேரங்களில் பணிபுரிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் !

பெண்களுக்கு இரவு நேரங்களில் தொழில் புரிய விதிக்கப்பட்டுள்ள வரையறை நீக்கவும் மேலதிக காலம் சேவையில் ஈடுபடுத்த கூடிய நேர வரம்பை நீக்கவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

சட்டத்தில் மாற்றம் செய்யுமாறு அறிவிப்பு

இதற்காக தொழில் சட்டத்தில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

10 நாட்கள் 15 நாட்களாக அதிகரிக்கப்படும்

தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்ட விதிமுறைகளுக்கு அமைய மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே பெண்களை இரவு நேர பணிகளில் ஈடுபடுத்த முடியும்.

அதனை 15 நாட்களாக அதிகரிக்க தேவையான சட்டத்திருத்தங்களை செய்யுமாறு அமைச்சர் நாணயக்கார ஆலோசனை வழங்கியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor