வெளிவர இருக்கும் உயர்தர பரீட்சை பெறுபேற்று முடிவுகள்

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராத உயர் தரப்பரீட்சை முடிவுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றிய 3 லட்சத்து 45 ஆயிரத்து 300 பேர்

உயர்தரப் பரீட்சையில் பாடசாலைகள் ஊடாக 2 லட்சத்து 79 ஆயிரத்து 150 மாணவர்கள் தோற்றியதுடன் தனிப்பட்ட ரீதியில் 66 ஆயிரத்து 150 பேர் தோற்றியுள்ளனர். மொத்தமாக உயர் தரப்பரீட்சையில் இம்முறை 3 லட்சத்து 45 ஆயிரத்து 300 பேர் தோற்றியுள்ளனர்.

கோவிட் தொற்றியவர்களுக்காக தனியான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டன

240 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெற்றன. கோவிட் தொற்றிய பரீட்சாத்திகளுக்காக 28 நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்பட்டன.935 தனிமைப்படுத்த பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைகள் நடத்தப்பட்டன.

கடந்த முறை நடைபெற்ற உயர் தரப்பரீட்சை முடிவுகளை வெளியிட ஆறு மாதங்கள் சென்றதுடன் இம்முறை 5 மாதங்களில் பரீட்சை பெறுபேறுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: webeditor