ஆசிய கிண்ண போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை எதிர்க்கொண்ட இந்தியா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது,

இதன்மூலம் இந்தியா அணி 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் 9 வது போட்டி இன்றைய தினம் ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.

இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் அதிரடியாக பந்து வீச்சிய இளம் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே தனது 10 ஓவர்கள் நிறைவில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதேபோல், சரித் அசலங்க 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழத்தினார்.

இந்திய அணி சார்பில் அணித் தலைவர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இஷான் கிஷான் 33 ஓட்டங்களையும், கே.எல் ராஹுல் 39 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து, 214 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 42 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.

தனஞ்சய டி சில்வா 41 ஓட்டங்களையும் சரித் அசலங்க 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Recommended For You

About the Author: webeditor