அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட ஒரு வெளிப்படையான நடவடிக்கையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரான பசில் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவரை நேற்றைய தினம் சந்தித்து 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு சில நிவாரணங்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் திரு பசிலும் அவர்களது வழக்கமான அரசியல் ஈடுபாட்டின் ஒரு பகுதியாகவே சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச் சந்திப்பு ஒரு மணிநேரம் நீடித்ததுடன் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்கவும் சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறு ஏற்படாத வகையில் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் பசில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.