தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பு உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜீவன் தொண்டமான்

இரத்தினபுரி கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட வெள்ளாந்துரை தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பொன்று தோட்ட நிர்வாகத்தினரால் உடைக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட உட்டகட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு நேற்று சென்றுள்ளார்.

இந்தநிலையில் தோட்ட நிர்வாகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை வழங்குவதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ரமேஸ் பத்திரண பங்களிப்புடன் வேலைத்திட்டம்
இந்தநிலையில் தொடர்ச்சியாக பெருந்தோட்டங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை தீர்த்துக் கொள்வதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண பங்களிப்புடன் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் சிவில் சமூகங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை ஒன்றினைத்து கலந்துரையாடல் ஒன்று அடுத்த இரண்டு வாரங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் இவ்வாறான சம்பவங்களில் மக்களின் நலனை மாத்திரமே கருத்தில் கொண்டு அவர் செயற்படுவதாகவும் இவ்வாறான சம்பங்களில் அரசியல் இலாபம் தேட நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor