மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் அதிக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.
இதன் காரணமாக நீர்மின் உற்பத்தியின் அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி 15 சதவீதமாக காணப்பட்ட நீர் மின் உற்பத்தி 20 சதமாக வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் மழை பெய்து வருவதால் மின் தேவையும் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு மணித்தியாலத்துக்கு 45 ஜிகாவோட் தேவையாக இருந்த மின்சாரத்தின் தேவை தற்போது மணித்தியாலத்துக்கு 42 ஜிகாவோட் ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.