கூலித் தொழிலாளியின் மகள் முல்லைத்தீவில் முதலிடம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கலை பிரிவில் முல்லைத்தீவு உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி நவெரத்தினராசா தேனுஜா, மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவி
கலை பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
இவ் மாணவி தமிழ் , புவியியல் ,  சமூக விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 3 ஏ சித்தியினையும் ஆங்கிலம் பாடத்தில் எஸ் பெறுபேற்றையும் பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 283 வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவரது தந்தை ஒரு கூலித் தொழிலாளி என்பதுடன், தான் எதிர்காலத்தில் ஒரு சிறந்த சட்டத்தரணியாக வந்து சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN