கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் பாடசாலை அமைப்பிற்குள் இருக்கும்போதே தொழிற்கல்வி தொடர்பான ஐந்து அடிப்படைப் பகுதிகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை அவர்கள் நிறைவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த திட்டமானது சாதாரண தரத்தை நிறைவு செய்துவிட்டு உயர்தரத்தை ஆரம்பிக்கக் காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் உயர்தரத்தை நிறைவு செய்த மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.