ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே உயிரிழந்திருக்கலாம், அல்லது, மிகவும் மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் Kyrylo Budanov தெரிவித்துள்ளார். இது குறித்து சில ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள Kyrylo Budanov, “கடைசியாக நாமெல்லோரும் நமக்கு நன்கு தெரிந்த புடினை 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 26ஆம் திகதி பார்த்தோம்.
அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார், அவர் உயிருடன் இருக்கிறாரா, அல்லது மோசமான உடல் நிலையில் உள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் வெளியான வீடியோ ஆதாரம் ஒன்றை சுட்டிக் காட்டியுள்ள Budanov, அந்த வீடியோவில், புடின் மணி பார்ப்பதற்காக தனது இடது கையில் கைக்கடிகாரத்தைத் தேடுவதைக் காணலாம். ஆனால் புட்டின் வலது கையில் கைக்கடிகாரம் அணியும் பழக்கம் உள்ளவர்.
ஆகவே தற்போது வீடியோவில் தோன்றுவது புட்டினின் நிழல் எனக் கூறியுள்ளார்.