கடலில் ஆபத்தான நிலையில் இருந்த இந்திய பிரஜையை காப்பாற்றிய இலங்கையர்

கிழக்கு கடற்பரப்பில் பயணிகள் கப்பலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவர் திடீரென சுகவீனமடைந்து சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று இலங்கைக்கு கிழக்கே கடற்பகுதியில் MV Empress என்ற பயணிகள் கப்பலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவர் சுகயீனமடைந்துள்ளார்.

குறித்த நபரை சிகிச்சைக்காக தரையிறங்குவதற்கு உதவுமாறு கடற்படை தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு வழங்கப்பட்ட அறிவிப்பின் பேரில் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதற்கமைய, கிழக்கு கடற்படைக்கு சொந்தமான P-491 போர்க்கப்பல் ஆபத்தான நிலையில் இருந்த இந்தியப் பிரஜையை தரையிறக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து கடற்படையினர் இந்திய பிரஜைக்கு முதலுதவி அளித்து திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Recommended For You

About the Author: webeditor