இலங்கை விமான நிலையங்களில் அமுலுக்கு வரும் தடை!

ரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்களை பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பட்டங்கள் பறக்கவிடப்படுவதால் பயணிகள் விமானங்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் விமான நிலையங்கள் அண்மித்த பகுதிகளில் பட்டங்களை பறக்க விட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க விமான நிலையம் நடமாடும் வாகனத்தை அனுப்பியுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து
THE CEYLON AIR NAVIGATION REGULATIONS, 1955ன் பிரிவு 248ன் படி, ஒரு பட்டம் அல்லது ஏதேனும் வானப் பொருள் பறக்கவிடப்பட்டால், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்.

அதற்கமைய, 5 கிலோமீட்டர் சுற்றளவில் காற்றில் 300 அடி அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் பட்டங்களை பறக்கவிடுவதும், ட்ரோன்களை பறக்கவிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

வானில் பட்டம்
பறக்கும் போது பட்டங்களை பறக்க பயன்படுத்தப்படும் தடிமனான நூள் வான்வெளிக்கு ஒரு அச்சுறுத்தலாகும். இதனால் கட்டுநாயக்க, மத்தளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள வானில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு நிர்வாகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

விமான நிலைய அதிகாரசபையானது பல பகுதிகளில் ஒலிபெருக்கிகளை பொருத்தி இது தொடர்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பொழுதுபோக்காக இருக்கும் பட்டம் பறக்கவிடுவதற்கு எதிரானது அல்ல. விமானப் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor