நாட்டில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி புத்தகம் மூலம் பணம் பெறும் போது சில வங்கிகளினால் மிகவும் நியாயமற்ற முறையில் 50 ரூபாய் அறவிடுவதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்துஅநீதி இழைக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
எவ்வித முன்னறிப்புகளுமின்றி இவ்வாறு வங்கி புத்தகம் மூலம் பணம் பெறும் போது தனியார் வங்கிகள் 50 ரூபாய் அறவிடுவதாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தனியார் வங்கி
அண்மையில் திம்பிரிகசாய பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றில் வங்கி புத்தகம் மூலம் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி முகாமையாளரிடம் வினவியுள்ளார்.
இதன்போது, வாடிக்கையாளர்கள் வருவதால் வங்கிக்கு அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனால் வங்கி, அட்டைகளை பயன்படுத்தி ஏ.ரி.ம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் நடைமுறையை ஊக்குவிப்பதற்காக பணம் அறிவிடும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக வங்கி முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், 50 ரூபாவை அறவிடுவதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளதா என வங்கி முகாமையாளரிடம் வினவியபோது, அவ்வாறான அனுமதி இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.