கம்பஹா பகுதியில் உள்ள தொடருந்து நிலைய முகாமையாளர் மற்றும் பயணச்சீட்டு பரிசோதிக்கும் அதிகாரிக்கு எதிராக பெண் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இளம் தாயும் அவரது 11 வயது மகளும் கம்பஹா தொடருந்து நிலையத்தில் இறங்கியுள்ளனர்.
வாசலில் இருந்த தொடருந்து பயணச்சீட்டு சோதனை அதிகாரி, பயணச்சீட்டைக் கேட்டபோது வழங்குவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. இதனால் பயணிகள் முன்னிலையில் அவமானகரமான முறையில் பகிரங்கமாகத் திட்டியுள்ளார்.
முறைப்பாடு
இது குறித்து தொடருந்து நிலைய தலைமை அதிகாரியிடம் முறைப்பாடு செய்ய சென்றபோது, அவரும் தன்னை இதேபோல் பகிரங்கமாக திட்டிவிட்டு, மீண்டும் நிலையத்திற்கு வர கூடாதென மிரட்டியதாக பொலிஸாரிடம் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
தலைமை அதிகாரி தனது கையடக்கத் தொலைபேசியில் தன்னைப் புகைப்படம் எடுத்ததாகவும், சம்பவத்தை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக எடுத்ததாகவும் அந்தப் பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.