கனடாவில் இருந்து மஹரகமவில் உள்ள போலி முகவரிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட ஒரு மர்ம பொதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
அதற்கமைய, அவ்வாறு கிடைத்த கோடி ரூபா பெறுமதியான ஹாஷீஷ் போதை பொருள் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
கடந்த மே மாதம், இந்த பொதி மத்திய தபால் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள்
யாரும் பொதியை பெற முன்வராததால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை, சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதற்கமைய, அந்த முகவரி போலியானது என தெரியவந்துள்ளது.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் இலங்கை தபால் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் இந்த பொதியை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொம்மைகள்
நாய் உணவு மற்றும் பொம்மைகள் அடங்கிய இரண்டு பொதிகளில் ஹாஷிஷ் மறைத்து வைக்கப்பட்டது.
குறித்த பொதியில் 670 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸார் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.