அவுஸ்ரேலியாவில் பாடசாலைக்கு மாணவர்கள் கத்தி கொண்டு செல்ல அனுமதி!

ஆஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் பாடசாலைக்கு கத்தியை எடுத்து செல்ல அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பாடசாலைகளுக்கு சீக்கிய மாணவர்கள் கிர்பான் எனும் கத்தியை கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

கிர்பானை எடுத்து செல்வது தங்களது மத அடையாளங்களில் ஒன்று எனவும், இந்த தடையானது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் கோரி அங்குள்ள உச்ச் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் தீர்ப்பு வெளியானது.

இதில், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது என்று கூறிய உச்ச நீதிமன்றம் இந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதேவேளை, மைதானத்தில் கிர்பானை எடுத்து செல்வதை தடை செய்யும் பாடசாலையின் உரிமையை இது பாதிக்காது என உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த தீர்ப்பின் தாக்கங்களை பரிசீலிப்பதாக குயின்ஸ்லாந்து மாகாண கல்வித்துறை கூறியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor