இலங்கைக்கான உணவு ஆதரவை மீண்டும் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்தியா இலங்கை, மியன்மார் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன் கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் மற்றும் உணவு உதவிகளை வழங்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மை நிலைமை அச்சுறுத்தலாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியா அறிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த நாடுகளுக்கு உதவ சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று பாதுகாப்பு சபைக்கான இந்தியாவின் தூதுவர் ருச்சிரா காம்போஜ் எடுத்துரைத்தார்.
மேலும், ஐ.நாவின் மதிப்பீட்டின்படி, 62 நாடுகளில் 362 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.
இருப்பினும், உணவு உதவியை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுக்க முடியாது என்று காம்போஜ் வலியுறுத்தினார்.
ஆகவே உணவுப் பாதுகாப்பின்மைக்கு நிலையான தீர்வு அவசியம் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.