திரிபோஷ வழங்கும் நடவடிக்கை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு இவ்வாறு திரிபோஷா வழங்கப்படவுள்ளது.
திரிபோஷ தயாரிப்பில் இருக்க வேண்டிய அஃப்லாடாக்சிகோசிஸின் அளவு தொடர்பான பிரச்சினையால் ஒரு வருடத்திற்கு மேல் நிறுத்தப்பட்டதாக திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.
இம்மாத இறுதியில் இறுதி முடிவு
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் பல அதிகாரிகளின் இழுபறி காரணமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான நீண்டகால கலந்துரையாடல்கள் தற்போது வெற்றிகரமான மட்டத்தில் உள்ளது, இம்மாத இறுதியில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதன்படி, ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு தேவையான மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் திரிபோஷ பொதிகளை வழங்குவதற்கான உற்பத்தி நடவடிக்கைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க முடியும் என்று திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.