யாழில் 16 வயது சிறுமியின் மரணத்திற்க்கான காரணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்

யாழில்16 வயதான சிறுமியை வேலைக்கு அமர்த்தி சிறுமியின் மர்ம மரணத்திற்கு காரணமான யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது பதிவு செய்ய கூடிய வழக்குகள் தொடர்பில் முகநூலில் பிரித்தானியாவில் வாழும் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1956 ம் ஆண்டின் 47 ம் இலக்க, பெண்களையும் இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்தல் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை இரவு வேலைக்கு அமர்த்திய குற்றம் – பிரிவு 2

16- 18 வயதுக்குட்பட்டவரை தொழிலுக்கு அமர்த்தியது தொடர்பாக தொழில் திணைக்கள ஆணையாளருக்கு முறைப்படி அறிவிக்காத குற்றம் – பிரிவு 3(5)

தொழிலுக்கு அமர்த்திய நபருக்கு போதிய ஓய்வு அளிக்க தவறிய குற்றம்.
18 வயதுக்குட்பட்ட ஆட்களை தொழிலுக்கு அமர்த்தப்பட்டிருப்பின் பெயர், பிறந்த திகதி, வேலை நேரம் தொடர்பான பதிவேட்டை பேணத் தவறிய குற்றம் – பிரிவு 5

ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய பொலிஸார் என்ன முயற்சி செய்துள்ளனர்? ( வழமைபோல லஞ்ச ஊழல் செல்வாக்கு நிலவுகின்றதா) பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க தவறின் மனித உரிமை ஆணைக்குழு, வட மாகாண ஆளூனர், யாழ் அரச அதிபர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்களா? 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் நபர்களுக்கு இந்த வழக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். என பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் யாழ்ப்பாண நபரும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினருமான Visitharan Praisoody பதிவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor