ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற சத்துக்குள் அடங்கியுள்ளன. நார்ச்சத்து, வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், கால்சியம் என்று சத்துக்கள் நிறைந்துள்ளது.
சரி… தினமும் 2 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் –
1. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள டேங்கரின், நோபெலிட்டின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வெளியேறி உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
2. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடல் எலும்புகள் வலிமைப் பெறும்.
3. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
4. ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும். ஆரஞ்சு பழத்தில் உள்ள ஊட்டச்சத்து விந்தணுக்களை உருவாக்க துணை செய்கின்றன.
5. தலை முடி உதிர்ந்தால், தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறையும்.
6. ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதன் மூலம், வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகளின் வீக்கம், பல் சொத்தை, வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும்.
7. இரவில் தூக்கம் வரவில்லையென்றால், ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் நிச்சயம் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.
8. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், புற்று நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
9. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், சருமம் பட்டுப்போல மிளிரும்.