சட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (21.07.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
சட்ட ஆலோசனைகளைப் பெற்று பின் ஜயந்த சமரவீர முன்வைத்த யோசனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.