முஹர்ரம் புது வருடப்பிறப்பு நிகழ்வுகள்

முஹர்ரம் புது வருடப்பிறப்பு நிகழ்வுகள்  இன்று(20)  கமு/கமு/அஸ்-ஸுஹறா பாடசாலையின் அதிபர் எம்.எச்.எஸ் ஆர் மஜீதிய்யா தலைமையில் மிகச் சிறப்பாக பாடசாலையின் முஸ்லிம் மஜ்லிஸ் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுக்கு கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலின் பேஷ்இமாம் மௌலவி ஏ .சி.எம்.முஹ்யிதீன் மன்பயி  மாணவர்களுக்கு பின்பற்றவேண்டிய விழுமியம் பண்புகள்,பெற்றோர்,ஆசிரியர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் பாடசாலை மாணவர்கள் எவ்வாறு ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்க வேண்டும் முஹர்றம் மாத்தின் முக்கிய நிகழ்வுகள் பற்றி விழிப்புணர்வு  உரையை நடாத்தினார்.
 
தொடர்ந்து பாடசாலை மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட முகர்றம் வாழ்த்தட்டை தொகுதியும் வெளியீடு செய்யப்பட்டது.பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி மகிழ்வூட்டப்பட்டது.
மேலும் பாடசாலைக் தோட்டத்தில் உள்ள மாம்பழம் ஒன்றும் சம்பிரதாயபூர்வமாக முஹர்றம் புதுவருடத்தை முன்னிட்டு பேஷ்இமாம் அவர்களால் அறுவடை செய்யப்பட்டது.
 
இவை அனைத்தும்   காலை விஷேட ஆராதனையில் சுற்றுநிருபத்திற்கமைவாக இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் மாணவர்கள்,ஆசிரியர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கினர்.

Recommended For You

About the Author: S.R.KARAN