யாழ்ப்பாண மாவட்டம் பாசையூர் பகுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில், பாசையூரைச் சேர்ந்த 19 வயதுடைய லிசியஸ் மேரி சானுயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சானுயா என்பவர் தனது தங்கையின் ஆடையை அணிந்ததனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த சானுயா தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து காயமடைந்த மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த16ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் உயிரிழந்த மாணவியின், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார்.
உயிரிழந்த மாணவி சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார்.
மேலும், க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8 பாடங்களில் விசேட சித்தியினையும் 1 பாடத்தில் திறமைச் சித்தியினையும் பெற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.