ஆடி மாதத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டிய முறைகள்

ஆடி மாதம் என்பது ஆஷாட மாதம் என்றும் ஸ்ரவண மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மாதத்தில் அம்மனையும், சிவனையும் விரதம் இருந்து வழிபடுபவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஆடி வெள்ளியில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.

வீட்டில் அம்மனின் விக்ரஹம் வைத்திருப்பவர்கள் வீட்டிலேயே பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

இந்த மாதத்தில் குங்குமத்தால் அம்மனுக்கு அர்ச்சனை செய்து மாங்கல்ய பலத்தை அதிகரிக்க செய்யும்.

ஆடி மாதம் அம்மனை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாகும். ஆன்மிக மாதமான ஆடி மாதம், வழிபாட்டிற்கு மிகவும் உகந்த புண்ணிய காலமாகும்.

வழிபாட்டு நாட்கள்

இந்த மாதத்தில் வரும் ஆடி அமாவாசை, ஆடி பெளர்ணமி, ஆடி பூரம், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு என அனைத்துமே மிக உயர்ந்த புண்ணிய பலன்களை தரக் கூடிய வழிபாட்டு நாட்களாகும்.

ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என சொல்லப்பட்டாலும் இது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற மாதமாகும்.

இந்த மாதத்தில் அம்மனை நம்முடைய வீட்டிற்கு அழைத்து பூஜை செய்வதால் அம்மனின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கும்.

வழிபாடு

வீட்டில் அம்மனுக்கு புது வஸ்திரம் வாங்கி வைத்து, வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, மஞ்கள் கிழங்கு, வளையல், கண்ணாடி உள்ளிட்ட மங்கல பொருட்களை வாங்கி வைத்து வழிபட வேண்டும்.

தினமும் அம்மனுக்கு நைவேத்தியம் படைக்க முடியா விட்டாலும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறந்தது.

அம்மனுக்கு நைவேத்தியம்

ஆடி மாதத்தில் சர்க்கரை பொங்கல், கூழ் படைத்து அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

வீட்டு வாசலில் வேப்பிலை, மாவிலை ஆகியவற்றை தோரணமாக கட்டி அம்மனை வரவேற்க வேண்டும்.

ஆடி மாதத்தில் தினமும் காலையிலும், மாலையிலும் வீட்டில் விளக்கேற்றி, தூப, தீபம் காட்டி வழிபடுவதால் அம்மன் மனம் மகிழ்ந்து, நமக்கு வேண்டிய வரங்களை தந்தருள்வாள்.

பணத்தை ஈர்க்கும் ஆடி மாதம் விளக்கு வழிபாடு

ஆடி மாதத்தில் வீட்டில் உள்ள பித்தளை விளக்கிலோ அல்லது மண் அகல் விளக்கிலோ நெய் விட்டு, தாமரை தண்டு திரியால் விளக்கேற்ற வேண்டும்.

விளக்கு ஏற்றுவதற்கு முன் அந்த விளக்கில் 4 அல்லது 5 டைமண்ட் கற்கண்டுகளை போட்டு விளக்கேற்ற வேண்டும்.

தீபத்தின் அகலில் நெய் உருகும் போது, அதற்குள் இருக்கும் கற்கண்டும் இளகி, புது விதமான மணம் வீசும். இந்த மணம் வீடு முழுவதும் பரவும் போது தெய்வீக சக்தியானது வீட்டில் நிறைய துவங்கும்.

நெய் தீபம்

நெய் தீபத்தில் கற்கண்டு சேர்த்து விளக்கு ஏற்றுவதால் வீட்டில் தடை இல்லாமல் பணம் வந்து கொண்டே இருக்கும்.

மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். கடன் தொல்லை தீரும். நோய் நொடிகள் அகலும்.

ஆடி மாதத்தின் அனைத்து நாட்களும் இந்த தீபத்தை ஏற்றுவது மிக சிறப்பானதாகும்.

மற்ற மாதங்களிலும் இந்த தீபத்தை ஏற்றலாம். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றி, அம்மனுக்குரியமந்திரங்களை சொல்லி வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.

Recommended For You

About the Author: webeditor