இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியானது பெருகிவரும் ஆற்றுவாழைத் தாவரங்களால் அழிவடைந்து வரும் நிலையில் முதலைகளின் தொல்லைகளாலும் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பாடும் மீன்கள் வாழும் வாவி
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு வாவியில் மீன்கள் பாடலிசைத்ததால் பாடும் மீன்கள் வாழும் வாவி என சர்வதேச புகழ் பெற்றது.
மட்டக்களப்பு வாவியை வாழ்வாதாரமாக நம்பி சுமார் 15 ஆயிரம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் வாவியின் ஆற்றுவாழைத் பெருக்கத்தால் மீனவர்கள் தோணிகளைத் தள்ள முடியாமலும் அவதியுறுவதாகத் தெரிவிக்கின்றனர்.
அதோடு முதலை மற்றும் பாம்புகளும் அதனுள் மறைந்திருப்பதாக தெரிவித்த மீனவர்கள், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கபப்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே வாவியினை அழித்துவரும் ஆற்றுவாழைகளை அகற்றி தமது வாழ்வாதாரத்திற்கு வழிவிடுமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.