ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ( கருணா அம்மான்) இடையிலான விசேடசந்திப்பு இன்று காலை ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பிலும், எமது புலம்பெயர்ந்த உறவுகள் எமது மண்ணில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், முதலீடுகளுக்கும் இடையூறாக இருக்கும் விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதாகவும் , அதேவேளை இவ்விடயம் தொடர்பில் முனைப்புடன் செயற்படுமாறும் தேவை ஏற்படும் போது நேரடியாக தன்னை அணுகுமாறும் கருணா அம்மானிடம் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் கருணா அம்மானின் இணைப்புச் செயலாளர் டானியல் கௌதமன் தெரிவித்தார்.
இச் சந்திப்பின்போது கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.