கனடாவாழ் இலங்கையர்களுக்கு உணவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் சிப்பி வகை உணவு ஒன்றில் நோய்க்கிருமிகள் தொடர்பான எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

கனடாவில் ஆய்ஸ்டர்ஸ் எனப்படும் சிப்பி உணவில் விப்ரியோ என்னும் நோய்க்கிருமி காணப்படும் அபாயம் தொடர்பில் உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், விப்ரியோ என்பது, கடல் நீரில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும். பருவநிலை மாற்றத்தால் கடலின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த விப்ரியோவின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இதற்கு முன் பொதுவாக காணப்படாத இடங்களுக்கும் இந்த விப்ரியோ கிருமி தற்போது பரவி வருகிறது.

இந்த விப்ரியோ கிருமி, கனேடியர்கள் விரும்பி உண்ணும் ஆய்ஸ்டர்கள் என்னும் சிப்பி வகை உணவில் காணப்படும் அபாயம் உள்ளது.

பலர் இந்த சிப்பி வகை உணவை பச்சையாக சாப்பிடுகிறார்கள். பொதுவாகவே பல கிருமிகள், உணவை உயர் வெப்பநிலையில் சமைக்கும்போதுதான் கொல்லப்படுகின்றன.

இந்த சிப்பி உணவை பச்சையாக சாப்பிடுவது இந்த விப்ரியோ கிருமியால் உருவாகும் விப்ரியோசிஸ் என்னும் நோய்க்கு வழிவகுக்கலாம். ஆகவே, இந்த சிப்பி உணவை பச்சையாக சாப்பிடாமல், நன்றாக வேகவைத்து சாப்பிடுமாறு உணவுக்கலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உண்மையில் பிரச்சினை என்னவென்றால், இந்த ஆய்ஸ்டர் வகை சிப்பிகள், கடல் நீரை உள்ளிழுத்து, அவற்றிலுள்ள பாசி போன்ற விடயங்களை தங்களுக்குள் தக்கவைத்துக்கொண்டு தண்ணீரை மட்டும் வெளியேற்றிவிடும்.

அந்த பாசியை அவை உணவாக உட்கொள்ளும்.ஆனால், அப்படி பாசிக்காக கடல் நீரை உள்ளிளுக்கும்போது, இந்த விப்ரியோ போன்ற கிருமிகளும் சிப்பிக்குள் வந்து அப்படியே சிக்கிக்கொள்கின்றன.

ஆகவேதான், அவற்றை மனிதர்கள் பச்சையாக உண்ணும்போது அவை நோய்களை உண்டுபண்ணிவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கனடாவில் வசிக்கும் இலங்கையர்களும் சிப்பி உணவு தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

Recommended For You

About the Author: webeditor