எடை அதிகரிப்பது ஒரு நோயல்ல. ஆனால் அதன் காரணமாக அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், இதய தமனி நோய் உட்பட பல ஆபத்தான பிரச்சினைகளுக்கு காரணமாகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதைத் தவிர்க்க உடல் பருமனை குறைக்கும் வகையிலான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் வைத்தியசாலையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ், தினமும் உணவில் திராட்சையை பிரத்யேகமான முறையில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை குறைப்பது மிகவும் எளிது என்று கூறியுள்ளார்.
உலர் திராட்சையில் இரும்பு, கால்சியம் நார் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன பொதுவாக இந்த உலர் பழம் பல இனிப்பு உணவுகளில் சேர்க்கப்படுகிறது.
இதனை அப்படியே சாப்பிடலாம், ஆனால் அதன் தண்ணீரை ஊறவைத்து குடித்தால், அது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது என்பதோடு பல விதமான நோய்களிலிருந்தும் காக்கிறது.
திராட்சை ஊற வைத்த தண்ணீர் குடிப்பதால் இது உடல் நச்சுகளை குறைக்க உதவுகிறது மற்றும் அதிகரித்து வரும் எடையை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.
வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் திராட்சைப்பழத்தில் காணப்படுகின்றன, இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தொடங்குகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டது. ஏனெனில் இது நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்கிறது.