சீமா மலாக்கா என்பது இலங்கையின் மிகவும் பிரபலமான கட்டடக் கலைஞர் ஜெஃப்ரி பாவாவால் வடிவமைக்கப்பட்ட ஒரு பௌத்த விகாரையாகும்.
ஏறக்குறைய 120 ஆண்டுகளுக்கு முன்பு, சீமா மாலக்கா கங்காராம கோவிலின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
ஆனால் எழுபதுகளில் சீம மலக்கா சிதைந்து நீருக்கடியில் மூழ்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து எழுபதுகளின் பிற்பகுதியில் இந்த அமைப்பு முஸ்லிம் வர்த்தகரொருவரின் நன்கொடையால் புனர்நிர்மானம் செய்யப்பட்டது.
இந்த பௌத்த விகாரையில் பிள்ளையார் மற்றும் விஷ்ணு போன்ற இந்து தெய்வங்களின் சிலைகளும் இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.
இதன் கட்டடக்கலை மற்றும் அமைந்துள்ள தோற்றம், தெய்வங்கள் உள்ளிட்ட பல விடங்களால் ஈர்க்கப்பட்டு பெருந்திரளான மக்கள் நாள்தோறும் இந்த விகாரைக்கு படையெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.