தமிழகத்தில் சாதனை படைத்த இலங்கை அகதி பெண்

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்து காட்டியுள்ளார்.

மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500 ற்கும் அதிகமானோர் வசித்து வரும் நிலையில் அங்குள்ள 50 ற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி கற்று வருகின்றனர்.

2022-23 கல்வியாண்டில் 8 மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். அதில், உதயராஜ் என்பவரின் மகள் திரித்துஷா கூடல்நகர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் ஆர்ட்ஸ் பிரிவில் பயின்று 591 மதிப்பெண் எடுத்துள்ளார்.

தமிழில் – 97, ஆங்கிலத்தில் – 96 ,எக்கனாமிக்ஸ் – 99 , வணிகவியல் 99, கணக்குப்பதிவியல் – 100, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் – 100 என மொத்தம் 591 மதிப்பெண்களை பெற்றுள்ளார். “பத்தாம் வகுப்பு நிறைவடைந்தவுடன் அறிவியல் பிரிவை கற்று மருத்துவராக வேண்டும் என்று தான் ஆசை எனவும் ஆனால், அகதிகள் முகாமில் இருப்பதால் எங்களால் படிக்க முடியாது.

அதனால் வணிகவியல் படித்துள்ளேன். ஆடிட்டராக வேண்டும் என்பது எனது விருப்பம்” எனவும் அந்த மாணவி திரித்துஷா தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor