பாகிஸ்தான் நாட்டில் இரண்டு ஆணுறுப்புகளுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் குறித்த இரு ஆணுறுப்புகளும் செயற்படும் நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் 6 மில்லியன் குழந்தைகளில் ஒருவரை மட்டுமே பாதிக்கும் டிஃபாலியா என்ற நோயுடன் இந்த குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த டிஃபாலியா அறிகுறி இருந்திருக்கவில்லை எனவும் மருத்துவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
பெரும்பாலும் இத்தகைய குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு உறுப்பை அகற்ற வேண்டும் எனவும் ஆனால் இந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் இரண்டு உறுப்புகளையும் அப்படியே விட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதில் ஒரு ஆண்குறி மற்றயதை காட்டிலும் 1 செ.மீ பெரிதாக இருப்பதுடன், குழந்தையால் இரண்டு துவாரங்களிலிருந்தும் சிறுநீர் கழிக்க முடிவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி இந்த குழந்தை ஆசனவாய் இல்லாமல் பிறந்துள்ளமையால் அறுவைசிகிச்சை நிபுணர்கள் கொலோனோஸ்கோபி எனும் அறுவை சிகிச்சை மூலம் மலம் கழிக்கும் வகையில் ஒரு திறப்பை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் குழந்தையால் தற்பொழுது மலம் கழிக்க முடிகின்றது.