ஏப்ரல் 25ஆம் திகதி அதாவது நாளைய தினம் வடக்கு, கிழக்கில் அனைவரும் பூரண நிர்வாக முடக்கலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற சட்டம் 79ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் இன்று 2023ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கிறது.
இந்த சட்டம் வேண்டாம் என 40 வருடங்களாக போராட்டம் செய்கின்ற போதும் கூட கடந்த வருடம் நாங்கள் வடக்கு, கிழக்கில் ஆரம்பித்து நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என கோரி கையெழுத்துக்களை சேகரித்து அது உலகிலே இருக்கும் பல நாடுகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை போன்றவற்றுக்கு அனுப்பப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.