காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் கைது

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதன்போது பண்டிகை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் உணவு பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளை விற்பனை செய்த 8,231 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சில வர்த்தகர்கள் காலாவதியான கேக், பிஸ்கட் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.

இதேவேளை நாடு முழுவதும் 5,200 விசேட புலனாய்வு அதிகாரிகள் முட்டை வியாபாரிகள் உட்பட ஏனைய விற்பனையாளர்களை கைது செய்ய நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்ததாக நாடு முழுவதும் 809 முட்டை விற்பனையாளர்கள் மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் 708 விற்பனையாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor