இலங்கை வந்தார் சிவாஜி கணேஷனின் மகன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் நேற்று பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நாளைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆய்வு நூல் ஒன்றினை வெளியிடுவதற்கும் பட்டிமன்றம் ஒன்றினை நடத்துவதற்கும் குறித்த வருகை இடம்பெற்றுள்ளதாக சிவாஜி கணேசனின் மகன் தெரிவித்தார்.

அதன்படி சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூலினை முனைவர் மருதமோகன் மேற்கொண்டு குறித்த நூலினை நாளைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வெளியீடு செய்து வைக்கவுள்ளனர்.

அத்துடன் சிவாஜி கணேசனின் வெற்றிக்கு காரணம் அவரது வசனமா? அல்லது உடல் மொழியா? என்ற தலைப்பிலான பட்டிமன்றம் ஒன்றும் இடம் பெறவுள்ளது.

கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் இடம்பெறும் பட்டிமன்றத்தில் கரூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்களான வடிவேலு, சுதா தேவி, சுசிலா சாமி அப்பன் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜீவா ரஜிகுமார் ஆகியோர் பேசவுள்ளனர்.

நடிகர் திலகத்தின் மகனின் வருகையினை வரவேற்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்ரம் பிரபு நற்பணி மன்றத்தை சேர்ந்த தலைவர் மாலை, பொன்னாலை அணிவித்து பலாலி விமான நிலையத்தில் வரவேற்றனர்.

தொடர்ந்து நாளை மறுதினம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் நன்கொடை வழங்கப்பட்ட மூளாய் வைத்தியசாலையினைப் பார்வையிடுவதற்கும் நடிகர் திலகத்தின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor