யாழ் உரும்பிராய் அக்குபஞ்சர் வைத்தியர் தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி

சமூகத்தில் போலி வைத்தியமும் பல ஏமாற்று கதைகளை கூறி ஒருவரை தமது பிழையான சேவைக்கு இழுத்துச் செல்லும் அபாயம் காணப்பட்டு வருகின்றது.

‘விரைவில் நோய் குணமாகும் சாத்தியம்’ என பிழையான தகவல்கள் சமூகத்தில் நிலவும் போது பலர் அதன்பால் நாடிச் செல்வதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக சமூக வலைத் தளங்களில் உரும்பிராய் அக்குபஞ்சர் வைத்தியர் குறித்து பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது முகப்புத்தக பதிவில் மேலும் தெரிவித்ததாவது,

 

அண்மை காலமாக “தெய்வ வைத்தியராக” தன்னை தானே புகழ்ந்து பாடும் ஒருவர் நோயாளிகளை ஏமாற்றுகின்றமை உண்மையில் ஒரு வியப்பான செயல்!

நம் நாட்டில் ஆங்கில மற்றும் சுதேச மருத்துவம் (சித்த, ஆயுள்வேத, யுணானி) அங்கிகாரம் பெற்ற சுகாதார சேவைகள் ஆகும்.

துரதிருஷ்டவசமாக சில “போலி மருத்துவர்கள் அல்லது சேவையாளர்கள்”( அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் கற்கையை மேற்கொள்ளாத, பட்டத்தை பெற்றிராத, போதிய அறிவை கொண்டிராத) இந்த நாட்டில் பல்வேறு வடிவங்களில் மக்களை ஏமாற்றுகின்றமை துரதிருஷ்டவசமான செயல்.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறான ஒருவர் அண்மைக் காலங்களில் முகநூல் பதிவுகளை செய்துவருகிறார். இதனை சிலர் பின்பற்றுகின்றமை போலி வைத்தியத்தை ஊக்குவித்ததாக அமைவதுடன் தமக்கு தீங்கு ஏற்படுவதை பின்பு விளங்கிக் கொள்வார்கள்.

ஒருவருக்கு நோய் நிலைகள் ஏற்படும் போது தத்தமது வசதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் வைத்தியரை, வைத்திய சேவையின் வகையினை நாடுதல் அவரது அடிப்படை உரிமை ஆகும்.

ஆனால் வைத்திய சேவையினை பற்றி அறிந்து, ஆராய்ந்த பின்னர் ஒரு சேவையை தெரிவு செய்து பெற்றுக் கொள்ளுதல் சம்பந்தப்பட்ட நபரின் பொறுப்பு.

ஏனெனில் வண்ணப் பூக்கள் வண்டுகளை கவர்ந்து இழுப்பது போன்று இந்த போலி மருத்துவமும் பல ஏமாற்று கதைகளை கூறி ஒருவரை தமது பிழையான சேவைக்கு இழுத்துச் செல்லும் அபாயம் காணப்படுகிறது. “விரைவில் நோய் குணமாகும் சாத்தியம்” என பிழையான தகவல்கள் சமூகத்தில் நிலவும் போது பலர் அதன்பால் நாடிச் செல்லுவது உண்மையே.

அருகில் சென்றவர்கள் உண்மையில் வருத்தம் குணமடைய முன்னர் நோய் நிலையில் இருந்து விடுபட்டதாக ஏமாற்றப்படுகின்றமை தெளிவாக தெரிகிறது. நோய் நிலையில் இருப்பவருக்கு “சுகம் அடைந்து விட்டீர்கள்” என கேட்கும்போது இன்பமாக இருக்கும். விஞ்ஞான பூர்வமான கருத்துகளை புறந்தள்ளி தற்காலிக நற்செய்தியாக ஏற்றுக் கொள்ளுகின்றமை அறிவுபூர்வமற்ற செயலாகும்.

 

Recommended For You

About the Author: webeditor