உலகளாவிய கடன் வழங்குநர்கள், கடனாளி நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள், தரவுப் பகிர்வை மேம்படுத்தவும், தெளிவான கால அட்டவணைகளை அமைக்கவும் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளை ஆரம்பிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளன.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஜி20 நாடுகளின் தலைமை நாடான இந்தியா ஆகியவற்றின் தலைமையில், நடைபெற்ற புதிய உலகளாவிய இறையாண்மை கடன் வட்ட மேசை மாநாட்டின் பின்னர், இது குறித்த கூட்டு அறிக்கை ஒன்று நேற்றைய தினம் (12.04.2023) வெளியிடப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
எனினும் மறுசீரமைப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான உலகின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனாவின் எந்தவொரு உறுதிமொழியை அந்த அறிக்கையில் காணமுடியவில்லை.
முன்னதாக உலக வங்கி உட்பட்ட பலதரப்பு வளர்ச்சி வங்கிகள் கடன் மறுசீரமைப்பு இழப்புகளில் பங்கு கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை பீய்ஜிங் கைவிடத் தயாராக இருப்பதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்திருந்தது.
இருந்தபோதும், உலகின் மிகப்பெரிய இருதரப்புக் கடன் வழங்குநராக இருக்கும் சீனாவின் கால்-இழுத்தல் மற்றும் தனியார்த் துறை கடன் வழங்குநர்கள் இதில் சேர தயக்கம் காட்டுகின்றமையே தாமதங்களுக்கான காரணம் என்று அமெரிக்க அதிகாரிகளும் மற்றவர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.