நாட்டில் பயன்படுத்தப்படும் தேங்காயெண்ணெயில் 72 சதவீதமானவை தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதவை என கண்காணிப்பின் மூலம் தெரியவருவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,தேங்காயெண்ணெய் உற்பத்தி தொடர்பாக ஐந்து நட்சத்திரங்களை கொண்ட இலச்சினைகளை 2019 ஆம் ஆண்டில் ஏழு தேங்காயெண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மாத்திரமே பெற்றுள்ளது.
ஊழியர்களுக்கான தட்டுப்பாடு தீர்க்கப்படவில்லை
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் தேங்காயெண்ணெய் உற்பத்தி நடவடிக்கைகளை சிறந்த தர முடையதா? என்பதை பரிசோதிக்க வேண்டியது தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பாகும்.
அதேவேளை தும்பு அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிலையத்தில் நிலவும் ஊழியர்களுக்கான தட்டுப்பாடு தீர்க்கப்படவில்லை. மேலும் இங்குள்ள உபகரணங்களும் இன்னும் திருத்தப்படாதுள்ளன.
2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கண்ணாவ தும்பு உற்பத்தி நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், 15 இலட்சம் ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.