பிரித்தானியாவில் தாய், தந்தையரை தொடர்ந்து தொந்தரவு செய்ததற்காக நபர் ஒருவர் கைதான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவாரெனவும் இந் நபரை இங்கிலாந்து பொலிஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
போதைக்கு அடிமையான தேவன் படேல் என்பவர் போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தொடர்ந்து தனது பெற்றோரை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் போதைப் பொருட்களுக்கு தடை இருந்த போதிலும் இடைவிடாது தனது பெற்றோரை உளவியல் ரீதியாக பிளாக் மெயில் செய்து வற்புறுத்தி உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக போதைப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாதென ஏற்கெனவே தேவன் படேலுக்கு வால்வர்ஹாம்ப்டன் கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பெற்றோருக்கு தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட முறை தொடர்பு கொண்டு பணம் கேட்டு தொந்தரவும் செய்துள்ளார். அவ்வாறு பணம் கொடுக்காவிட்டால் பெற்றோர்கள் இருக்கும் இருப்பிடத்திற்கே சென்று பணம் கேட்பதை தேவன் வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்.
இதன் காரணமாக தேவனின் பெற்றோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி பொலிஸாரை தொடர்புகொண்டு இதற்கு மேலும் கொடுப்பதற்கு பணமில்லை எனச் சொல்லி அவர்கள் பொலிஸார் உதவியை நாடியுள்ளார்கள்.