நாட்டில் உள்ள ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவர் செயலற்றவராக /சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தொற்றா சுகாதார இயக்குநரகத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்தார்.
இதனால், இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், தினமும் உடற்பயிற்சி செய்ய ஒவ்வொருவரையும் ஊக்குவிப்பதன் மூலம் பல நோய்களைத் தடுக்க முடியும் என நிபுணர் மேலும் தெரிவித்தார்