பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன தெரிவிக்கின்றன.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திலான் மிரென்டா ஆகியோர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய விலை திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள்
புதிய விலை திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தள்ளனர்.

இதன்படி பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

எரிபொருள் விலை குறைப்புக்கு ஏற்ற வகையில் போக்குவரத்து கட்டணம் மற்றும் உணவு பொருட்களின் விலைகளை குறைக்குமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச கட்டணம்
அத்தோடு குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் மற்ற கட்டணங்கள் திருத்தம் நாளை அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor