அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

அமெரிக்காவுக்கு சுற்றுலா மற்றும் வர்த்தக விசாக்களில் சென்ற இலங்கையர் உட்பட வெளிநாட்டவர்களுக்கு வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும், வேலைக்கான நேர்காணலுக்கு செல்லவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில், பணியை ஆரம்பிக்க முன்னர் விசா நிலையை மாற்ற வேண்டும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் அல்லாத தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால், 60 நாட்களுக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பலர் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இது அவ்வாறு இல்லை என அமெரிக்க மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் அல்லாத தொழிலாளி தானாக முன்வந்து அல்லது தொழில் வழங்குனரால் பணிநீக்கம் செய்யப்பட்டால், தகுதியான விண்ணப்பதாரர்களாக மாற்றிக் கொள்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor