கடல் வழியாக சட்டவிரோதமாக யாழ்ப்பாணம் வந்த நபர் கைது!

பாம்பனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சட்டவிரோத படகு மூலம் ஒருவர் செல்வதற்கு உதவிய நான்கு பேரை தமிழக கரையோரக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (2023.03.24) இந்தியக் கடலோரக் பொலிஸ் படையினர் அரிச்சல்முனை அருகே, கடல்வழியாக உரிய ஆவணங்கள் இன்றி இலங்கைக்குள் நுழைய முயன்ற ஒருவரைக் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, படகு ஒன்றின் உரிமையாளர் உட்பட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்தனர்.

முன்னதாக யாழ்ப்பாணத்துக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஜனஹான் பெர்னாண்டோ என்று அடையாளம் காணப்பட்டார்.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து சட்ட விரோத வருகை

அவர் ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்று 2010 இல் தன்னை அகதியாக பதிவுசெய்துள்ளார். எனினும் இலங்கைக்கு திரும்ப முயன்ற அவருக்கு இங்கிலாந்து அதிகாரிகளிடம் அனுமதி கிடைக்கவில்லை.

இதனையடுத்தே அவர் இந்தியா சென்று கடல்வழியாக சட்டவிரோத படகு மூலம் யாழ்ப்பாணம் செல்ல முடிவு செய்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor