கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சந்திவெளி திகிலிவெட்டை பாதை தற்போது பாவனைக்கு உகந்ததாக காணப்படவில்லை என கிழக்குமாகாண இயந்திரப் பொறியியலாளர் நேரடியாக பார்வையிட்டு வாய்மொழியாக கூறியுள்ளார். விரைவில் அறிக்கையிடுவதாகவும் கூறினார்.
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வாகனங்களை பரீட்சித்து பார்ப்பதற்காகவும் மதிப்பீடு செய்வதற்காகவும் சபையினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய இரு தினங்கள் மதிப்பீட்டை மேற்கொண்டார்.
இதன்போது பாதைப்படகும் பரீட்சிக்கப்பட்ட போதே இதனை தெரிவித்தார்.
பாதையின் அடிப்பாகத்தால் பாதையினுள் நீர் உட்புகுவதால் ஓட்டுனர்கள் நீர் இறைக்கும் பம்பி மூலம் நீரை இறைத்ததன் பின்பே பாதையை நகர்த்த வேண்டியுள்ளது. இதற்கான மாற்று நடவடிக்கைகளை சபையின் செயலாளர் மேற்கொள்ள வேண்டும்.
50 நாட்களாக மட்டும் தவிசாளராக இருந்த நாட்களில் பாதைக்கான இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாட்டை முன்னெடுத்துள்ளோம் புதிதாக பாதை ஒன்றை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதிவசதி (ஆறரைக்கோடி) சபையில் இல்லை இன்றுடன் சபை கலைக்கப்படுகின்றது ஆதலால் இதற்கான மாற்று ஏற்பாட்டை எதிர்வரும் நாட்களில் சபைச் செயலாளர் மேற்கொள்வார் என எதிர்பார்கின்றேன் என தவிசாளர் க.கமலநேன் தெரிவித்தார்.