யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக இந்நிலையில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்கள் வறுமை நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வறுமை நிலையில் கர்ப்பிணிகள்
அத்துடன் பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், சங்கானைப் பிரதேச செயலகத்தில் 157 கர்ப்பிணிகளும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 139 கர்ப்பிணிகளும், யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவில் 138 கர்ப்பிணிகளும், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் 128 கர்பிணிகளும்,
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 118 கர்ப்பிணிகளும், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் 117 கர்ப்பிணிகளும், மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 98 கர்பிணிகளும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 97 கர்ப்பிணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 91 கர்பிணிகளும், மேலும் காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 40 கர்ப்பிணிகளும்,
வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் 49 கர்பிணிகளும், ஊர்காவற்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 கர்பிணிகளும், நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் 21 கர்ப்பிணிகள் என 1814 பேர் வறுமை நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை யாழில் பஞ்சளிம் குழந்தை ஒன்று போசாக்கின்மையால் உயிரிழந்த சமவம் பெரும் துயரத்தை ஏற்படுத்திய நிலையில், உள்நாட்டு போரின்போது கூட யாரும் பட்டியாலோ போசாகின்மையாலோ உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.