யாழில் யாசகர்களால் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்கள்!

யாழ்.நகரில் யாசகர்கள், ஊதுபத்தி விற்க்கும் பெண்கள் தொடர்பாக பொறுப்புவாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

யாழ்.நகருக்கு தினசரி பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் யாசகர்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை தினசரி அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள், பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துமீறல்கள்
குறிப்பாக யாசகம் பெறுபவர்கள் பொதுமக்களை அவதுாறாக பேசுவதுடன், வெளிநாட்டிலிருந்து வரும் புலம்பெயர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உடலில் தொடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த விடயம் யாழ்.மாநகரசபை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த சகலருக்கும் தொிந்திருந்தும், எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சித்திரை புத்தாண்டு காலம் நெருங்குவதால் தற்போதுள்ள இந்த மோசமான நிலமை மேலும் தீவிரமடையவுள்ளது. எனவே பொறுப்புவாய்ந்தவர்கள் சித்திரைப் புத்தாண்டு காலத்திற்கு முன்னர் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor