இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான அழகு சாதனப் பொருட்களில் சில பொருட்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 4 ஒப்பனை பொருட்கள் இலங்கை சுங்கத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பயன்படுத்துவோருக்கு சிக்கல்
இந்த அழகு சாதனப்பொருட்கள் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எனவே இலங்கைக்கு அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பான சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு சில சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.