இலங்கையில் 6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்கள் தங்களது மின்கட்டணத்தை செலுத்த தவறியுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்தும் திட்டம் 40 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைகளின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், மின் கட்டண அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் மின் சாதனங்களின் பயன்பாட்டை குறைத்துள்ளதாகவும், இவை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.