நாட்டில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் நீரிலிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட தேசிய ஆய்வில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி
பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சுகாதார கொள்கைக்கான நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் 2019 இல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புவியியல் ரீதியாக அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு பாதிப்புக்கள் இலங்கையின் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன.

மூன்றில் ஒன்று கொழும்பில் பதிவாகியுள்ளது அதே நேரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளும் அதிக எண்ணிக்கை பதிவுக்குள் வருகின்றன.

இந்த கண்டுபிடிப்புகளை கொண்டு ஆசியாவிலேயே சர்க்கரை நோயின் அதிக விகிதத்தைக் கொண்ட நாடாக இலங்கை உருவாகியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor