இலங்கையில் தொடர்ந்தும் சிறியளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகும் எனவும், மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்றைய தினம் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் வரலாற்றில் இதுவரை கிட்டத்தட்ட 2000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நிலநடுக்கங்கள் பதிவாகலாம்
திம்பில – புத்தல ஊடாக அதன் எல்லை கிழக்கு,மேற்காக வெல்லவாய பகுதிக்கு சென்று உசன் கொடவில் நிறைவடைகின்றது.
இதன் காரணமாக குறித்த எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிர்வுகள் ஏற்படலாம். குறித்த பகுதியில் இதற்கு முன்பும் நிலநடுக்கம் பதிவாகியிருந்த நிலையில் மீண்டும் பதிவாகலாம்.
எனவே இந்த சிறிய நிலநடுக்கம் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும் இந்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.